Google Inbox

கூகிள் இன்பாக்ஸ் – மற்றுமொரு கூகிள் ஆப் ஜீமெயில் ஆப் க்கு பதிலாக என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இல்லை. ஏன் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

நம்முடைய இமெயில் இன்பாக்ஸ் எப்படி உள்ளது? ஒரு நாளைக்கு சுமாராக எத்தனை இமெயில்கள் வருகிறது? அதில் எத்தனை ஸ்பாம்? எத்தனை சோசியல் மீடியாக்களில் இருந்து வருகிறது? வங்கி கணக்கில் இருந்து எத்தனை? அதுவும் சோசியல் மீடியாக்களில் இருந்து வரும் இமெயில்களின் எண்ணிக்கை நம்மை அயர்ச்சியாக்கி விடுகிறது. நம்மை மில்லியனராக்கிவிட துடிக்கும் நைஜீரிய நாட்டு நண்பர்களின் தொல்லை வேறு வாரம் ஒரு முறை.

இதற்க்கு மத்தியில் நமக்கு முக்கியமான இமெயில்கள் வங்கி கிரெடிட் கார்ட் கணக்கை திருப்பி செலுத்த நினைவுறுத்தியும், ஆயுள் காப்பீடு, லோன், நண்பனின் திருமண அழைப்பிதல் என.. இதில் சில முக்கிய இமெயில்கள் விடுபட்டுப் போக வாய்ப்புள்ளது. பொதுவில் மனைவி ஊரில் இல்லாத போது இருக்கும் வீடு போல காட்சியளிக்கும். இதற்க்கு ஒரு சிறந்த வழியைக் கண்டுபிடித்தது கூகிள். சில மாதங்களுக்கு முன் tabbed இமெயில் லேஅவுட் ஐ அறிமுகப்படுத்தியது. Primay, Social, Promotions மற்றும் forums என நான்கு tab கள். Primary இல் நமக்கு தேவையான முக்கிய இமெயில்கள் மட்டும் இருக்கும். சோசியல் இல் ட்விட்டர், கூகிள் ப்ளஸ் மற்றும் பேஸ்புக் இல் இருந்து வரும் இமெயில்களையும், Promotions இல் பல தரப்பட்ட (netflix, spotify,Flipkart, Amazon, Lenovo) விளம்பர குப்பைகளையும் forums இல் எதுவும் இணைய உரையாடல்களில் பங்கெடுக்கும் போது அந்த இமெயில்கள் அனைத்தையும் ஒழுங்குப்படுத்திக் கொடுத்தது. அந்த வசதி வந்ததில் இருந்து என்னுடைய இன்பாக்ஸ் நன்கு ஒழுங்குப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இருந்தாலும் ஒரு குறை. நம்மில் பெரும்பாலானோர் இரவில் விழிக்கும் பழக்கம் இருப்பவர்கள். விழித்தவுடன் அனிச்சையாய் மொபைல் ஐ எடுத்து இமெயில் செக் செய்வது வழக்கம் தானே. பெரும்பாலான வங்கி இமெயில்கள் இரவில் தான் வரும். கிரெடிட் கார்ட் ஸ்டேமென்ட் கட்ட நினைவுபடுத்தும் இமெயில் ஐ திறந்து படித்து விட்டு நாளைக் கட்டிவிடலாம் என்று எண்ணிக் கொண்டு மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவோம். ஆனால், அதை பெரும்பாலும் மறந்தும் விடுவோம். இமெயில் இல் அலாரம் க்கு இருப்பது போல snooze until tomorrow morning, afternoon அல்லது evening என்றொரு வசதி இருந்தால் நன்றாய் இருக்கும் என்று எண்ணியதுண்டு. அதை ஆறு மாதங்களுக்கு முன் கூகிள் features request இல் கூட கேட்டு இருந்தேன்.

அப்படி ஒரு வசதியுடன் இரண்டு ஆப்கள் கூகிள் ப்ளே ஸ்டோர் இல் உண்டு. Boomerang மற்றும் MailBox  இரண்டும் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஆப்கள். இரண்டுமே Mail Snooze and reminder வசதியைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

Boomerang
Mailbox

பிறகு என்ன கூகிள் இன்பாக்ஸ் இல் புதுசு என்று கேட்கிறீர்களா? கூகிள் இன்பாக்ஸ் கிட்டத்தட்ட ஜிமெயில் இன் கூகிள் இன் கூகிள் நவ் போன்று. நீங்கள் ஒரு நாளில் சோசியல் ,ப்ரோமோசன்ஸ், அப்டேட்ஸ்(job posts, shipment information), finances (Banking, Insurance Statements, Reminders), Purchases ) என பல bundles (Label இன் advanced version என்று சொல்லலாமா?!!) ஒவ்வொன்றிலும் முக்கிய இமெயில்களை முன்னிறுத்தி காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அந்த இமெயில்களை snooze செய்து தேவையான பொழுதில் நினைவுருத்தவும் செய்கிறது.

இமெயில்களை பின் (star in gmail) செய்து முன்னே காட்டவும், நீங்கள் அந்த இமெயில் குறிப்பிடப்பட்ட வேலையை செய்து முடித்து விட்டீர்கள் எனில் Marked As Done (check mark) (archive option in gmail) என்றொரு ஆப்சன் ம் உள்ளது. Snooze செய்யப்பட்ட இமெயில்கள் Snooze bundle லிலும், முடிந்த வேலைகள் Done என்ற bundle லும் சேகரிக்கப்படுகிறது. நீங்கள் அந்த செக் மார்க் ஐ அழுத்திப் பிடிப்பதன் மூலம் அந்த இமெயில்கள் ஐ mute செய்யவும் முடியும் .

நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் ஜிமெயில் இல் தானாகவே sync ஆகி விடும், உதாரணத்திற்கு நீங்கள் இன்பாக்ஸ் இல் டெலிட் செய்தால் ஜிமெயில் லும் டெலிட் ஆகிவிடும்.

இமெயில் மட்டும் அல்ல. தனித்தியங்கும் Reminders வசதியையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மேலும் உங்களுக்குத் தேவையான படி bundles customize செய்து கொள்ளவும் முடியும்.

இந்த ஆப் ன் ஆக்சஸ் இப்போது இன்விடேசன் மூலமாக மட்டுமே கிடைக்கிறது. ஆப் ஐ கீழ்கண்ட முகவரியில் இருந்து டவுன்லோட் செய்யலாம்.

மேலும் வெப்சைட் மூலமாக inbox.google.com என்ற முகவரியில் இருந்தும் ஆக்சஸ் செய்யலாம்.

 

புகைப்படத்தொகுப்பு:

 

தரவிறக்க:

ஆண்ட்ரைடு

Inbox by Gmail
Inbox by Gmail
Developer: Google LLC
Price: Free

ஐபோன்

Inbox by Gmail
Inbox by Gmail
Developer: Google LLC
Price: Free

 

Comments

comments