ரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.

இது வரை நான் பல ஆன்லைன் ரேடியோ ஆப்களை உபயோகித்து வந்திருக்கிறேன். இதில் TuneIn ரேடியோ மிகவும் பிடித்தமானது. அதில் ஸ்லீப் டைமர், ரெகார்டிங் உட்பட பல வசதிகள் உண்டு. இருப்பினும் தமிழுக்கென தனிப்பட்ட FM ஆப் இருப்பின் ஸ்ட்ரீமிங் மற்றும் புது அலைவரிசைகளைக் கண்டறிய எளிதாக இருக்கும். அப்படிப்பட்ட வசதிகளை வழங்கும் பல ஆப்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் எரிச்சலூட்டும் விளம்பரங்களும் ஏனோதானோவென வடிவமைக்கப்பட்ட USER INTERFACE ம் அவற்றை ஓரிரு தினங்களில் அன்இன்ஸ்டால் செய்ய வைத்து விடும். காசு வேண்டுமானாலும் கொடுக்கிறேன். அட்வர்டைஸ்மென்ட் ஐ நிப்பாட்டுங்க என்று கேட்டாலும் பதில் இருக்காது. மிக முக்கியமாய் கால் வரும் போது ஆப் தானாய் ப்ளேபேக் ஐ நிப்பாட்டாது போன்ற தொல்லைகள் வேறு. அதுவும் TuneIn Pro கடந்த அப்டேட் க்கு பிறகு சரியாய் வேலை செய்யவில்லை (இப்போது சரி செய்யப்பட்டு விட்டது) என்பதால் கொஞ்சம் கஷ்டமாய்ப் போனது.

இந்த நிலையில் ரேடியோ தமிழ் HD யின் பீட்டா டெஸ்டிங் க்கு ஒரு அழைப்பு வந்தது. குழுவிற்கு சென்று பார்த்த போது இன்னமும் ஆப் ரிலீஸ் செய்யவில்லை. ஸ்க்ரீன் சாட் மட்டும் பகிரப்பட்டு இருந்தது.  வாவ்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. உடனேயே அட்மினிடம் எப்ப பீட்டா வெர்சன் ரிலீஸ் ஆகும் என்று தொடர்ந்து நச்சரிக்க ஆரம்பித்து விட்டேன்.

சொன்னபடி இருநாட்களில் பீட்டா வெர்சன் ஐ ரிலீஸ்ம் செய்து விட்டனர். ப்ளே ஸ்டோரில் ஸ்மூத் ஆகவும் அருமையாகவும் வடிவமைக்கப்பட்ட ஒரு ஆப் என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

Non-Intrusive ads. நீங்கள் wifi இல் கனெக்ட் ஆகி இருக்கும் போது மட்டும் FM ஐ ப்ளே செய்யும் போது முழுப் பக்க அளவில் வீடியோ விளம்பரம் வருகிறது. அதன் பிறகு எந்த விளம்பரமும் இல்லை.

ஒவ்வொரு ஸ்டேசனுக்கும் அருமையாக வடிவமைக்கப்பட்ட இமேஜ் மற்றும் லோகோ. பெரும்பாலும் காரில் பயணிக்கும் போது FM கேட்பவன் என்பதால் விளம்பரத் தொந்தரவே இல்லை.கூகிளின் லேடஸ்ட் Material UI அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவிரைவாக ஸ்ட்ரீம் ஆகிறது. எந்த ஸ்டேசனில் எந்தப்பாடல் என்பது ஸ்க்ரோல் ஆகிக் கொண்டிருப்பதால் நீங்கள் பாடலின் அடிப்படையில் ப்ளே செய்து கொள்ள முடியும். மனதுக்குப் பிடித்த ஸ்டேசன்களை புக்மார்க் செய்து கொள்ளவும் முடியும். மிக முக்கியமாய் குரோம்காஸ்ட் சப்போர்ட்.

இருப்பினும் Pro வெர்சன் வேண்டுமென வேண்டுகோள் விடுத்து இருக்கிறேன். விரைவில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கலாம். முதல் பதிப்பு என்பதால்  மிகமுக்கியமான ஆனால் குறைவான வசதிகளுடனும் வந்து இருக்கிறது.

நான் விடுத்திருக்கும் வேண்டுகோள்கள்:

  • Sleep Timer (இரவில் தூங்கிப்போக வசதி )
  • Pro வெர்சன்

இசை ஆர்வலர்கள் கண்டிப்பாக உபயோகித்துப் பார்க்க வேண்டிய ஒரு ஆப்.

 

Comments

comments