நெக்சஸ் 6, நெக்சஸ் 9 மற்றும் நெக்சஸ் ப்ளேயர் – முதல் பார்வை

ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நெக்சஸ் 6 லாலி பாப் என்று பெயரிடப்பட்ட ஆண்ட்ரைடு வெர்சன் உடன் வெளியிடப்பட்டது. சந்தோசம் தானே என்றால் ஆமாம் என்றும் இல்லை என்பதற்கு மத்தியில் பொத்தாம் பொதுவாய் தலையாட்ட வேண்டியதாய் இருக்கிறது. நெக்சஸ் 6 போன் ஐத் தவிர நெக்சஸ் 9 டேப்லெட் ம் நெக்சஸ் ப்ளேயர் என்ற கூகிள் டிவி டிவைஸ் ம வெளியிடப்பட்டுள்ளது.
நெக்சஸ் 6:

என்னுடைய சேம்சங் galaxy s3 வாங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது, இரு முறை அந்த போன் ஐ உடைத்தேன் என்பதைத் தவிர வேறு எந்த பிரச்சினையும் இல்லாத ஒரு போன். T-mobile இல் வேறு, “தம்பி அப்கிரேட் இருக்கு. எந்த போன் வாங்குற” என்று இரு மாதமாய் ஒரே தொல்லை. சேம்சங் போன் ஐ இரு முறை உடைத்தேன் என்பதால் அந்த பக்கம் போவதில்லை என்ற முடிவு. LG க்கும் எனக்கு ஏழாம் பொருத்தம். Moto X tmobile இல் இல்லை என்பதால் நெக்சஸ் 6 க்காக காத்திருக்க வேண்டிய நிலை. மேலும் நெக்சஸ் போன் என்றால் OTA அப்டேட் க்காக காத்திருக்கத் தேவையில்லை அல்லவா.

எதிர்பார்த்ததற்கு மேல் 5.96” 1440×2560 display அதிகமான specs உடன் நெக்சஸ் 6 வெளியிடப்பட்டுள்ளது. $649 என்ற விலை கேட்டுத்தான் தலை சுற்றிப் போகவேண்டி இருக்கிறது. நெக்சஸ் போன்களின் அடிப்படையே தரமான போன்கள் குறைவான விலையில் என்பதுதான். இருந்தாலும் இன்னமும் என்ன விலை என்று கூகிள் அறிவிக்கவில்லை. மேலும் AT&T வெப்சைட் இல் காண்ட்ராக்ட் இல் $49 மட்டும் என்று சொல்லி இருப்பதால் போன் இன் விலை $399 அளவில் இருக்கும் என நம்புகிறேன். இந்த மாத கடைசியில் தெரிந்து விடும்.

  அப்டேட்: $649 விலை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நெக்சஸ் 9:

இன்றைய ஸ்டார் நெக்சஸ் 9 தான். 8.9 இன்ச் ஸ்க்ரீன் 64-bit NVIDIA Tegra K1 processor 2.3 GHz, 2048×1536 ஸ்க்ரீன் என பட்டையை கிளப்பும் ஸ்பெக்ஸ். விலை $399. சந்தேகமே இன்றி அருமையான டிவைஸ்.

 

நெக்சஸ் ப்ளேயர்:

மற்றுமொரு கூகிள் டிவைஸ். கூகிள் டிவி மென்பொருளுடன் அறிமுகப்படுத்தப்படும் முதல் சாதனம். விலை $99. 1GB RAM, 8GB storage மற்றும் இன்டெல் ஆடம் ப்ரோசெசர் உடன் வெளி வந்து இருக்கிறது. கூகிள் சாப்ட்வேர் க்காகவும் இன்டெல் ப்ரோசெசர் க்காகவும் $99 கொடுக்க வேண்டுமா என்ன? இதே அமேசன் பையர் டிவி 2GB RAM உடன் $87 கிடைக்கிறது. அதுவும் ஆண்ட்ரைடு மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது தான். பொறுத்திருந்தால் அன்றைடு டிவி மென்பொருளை அடிப்படையாகக் கொண்டு இதை விட விலை மலிவாக பல சாதனங்கள் வர வாய்ப்பு இருக்கிறது.

 

 

நெக்சஸ் 9 ஐத் தவிர என்னால் வேறு எதற்கும் சந்தோசப்பட முடியவில்லை. நெக்சஸ் 6 ன் விலை $649 எனில் சோனி xperia z3 compact அல்லது மோடோ x இரண்டில் ஒன்று வாங்கலாம் என்று எண்ணி இருக்கிறேன்.

Comments

comments