தி ரூம் (The Room – Game) – ஆண்ட்ரைடு கேம்

சிறு வயதில் Treasure Hunt என்றொரு விளையாட்டு விளையாடிய நியாபகம் இருக்கிறதா? ஆங்காங்கே ஒரு சிறு காகிதத்தில் குறிப்பு எழுதி ஒளித்து வைத்திருப்போம். ஒரு குறிப்பு மற்றொரு குறிப்பிற்கு வழிகாட்டும். இறுதியாக நாம் நமது புதையலை கண்டுபிடிப்போம்.

அதே போல் மிகச் சிறப்பான முறையில் FireProof Studio என்னும் பிரிட்டனைச் சேர்ந்த கம்பெனியால் வடிவமைக்கப் பட்ட ஒரு விளையாட்டு தான் The Room. ஒரு அறையில் ஒரு பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கும். அதில் பல உள்ளறைகள். நமக்கு கிடைக்கும் குறிப்புகளைக் கொண்டு அதை ஒவ்வொன்றாய் திறக்க வேண்டும். ஒரு குறிப்பிலிருந்து மற்றொரு குறிப்பிற்கு செல்ல பல வழிகளைக் கையாள வேண்டும்.

உதாரணமாக நமக்கு ஒளிப்பெருக்கி (லென்ஸ்) கிடைத்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். சில குறிப்புகளை சாதரணமாக பார்க்கும் போது எதுவும் புலப்படாது. ஆனால் லென்ஸ் கொண்டு பார்க்கும் போது அதுவும் குறிப்பிட்ட கோணத்தில் பார்க்கும் போது சில குறிப்புகள் கிடைக்கும். அதே போல் சாவி. பல உருவங்களைக் கொண்ட சாவி. அதை குறிப்பிட்ட கோணத்தில் ஒழுங்குப்படுத்தினால் மட்டுமே சில உள்ளறைகளை திறக்க முடியும்.

இந்த விளையாட்டின் இசையும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு விஷயம். நீங்கள் ஒரு திறமையான புதிர் விடுவிக்கும் ஆசாமி என்றால் கண்டிப்பாக வாங்க வேண்டிய கேம் இது. இதன் ரேட்டிங் பார்த்தாலே உங்களுக்கு உடனே வாங்க வேண்டும் என்று தோன்றும்.

புகைப்படங்கள்
இரண்டு வெர்சனில் கிடைக்கிறது

 

 

 

 

Comments

comments