கூகிள் பிட் – (Google Fit)

கூகிள் பிட் – கூகிள் ன் அடுத்த ஆப் இன்று வெளியிடப்பட்டது. இதைப் பற்றி இன்று அறிந்துகொள்வோம். பொதுவாக எந்த ஒரு ஹெல்த்கேர் அப்ளிகேசன் ஆக இருந்தாலும் அவை நாம் இயக்கத்தைப் பொறுத்து நமது Calories மற்றும் activities ஆகியவற்றை அறிந்து கொள்கின்றன. நாம் வீட்டுக்கு வெளியே நடப்பதும், ஓடுவதும் GPS, WIFI , CELLID முதலியவற்றைக் கொண்டு track செய்ய இயலும். மேலும் நமது மொபைல் இல் உள்ள மோசன் (Motion Sensor) ஐக் கொண்டும் நமது இயக்கத்தை அறிந்து கொள்ள இயலும். நாம் நடப்பதை ஸ்டேப் கவுண்டர் சென்சர் (Step Counter Sensor – base sensor – accelerometer) கொண்டு அளவிட இயலும். இவை நாம் அனுமதி கொடுக்கும் பட்சத்தில், நமது ஒவ்வொரு இயக்கத்தையும் இவை தொடர்ந்து அளவிட்டுக் கொண்டே இருக்கும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தோமேயானால், ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு செல்போன் இல் பேசுவதே சாதனையாக இருந்தது. இப்போது செல்போன் இல் செய்யவியலா காரியங்களே இல்லை எனலாம். Accelerometer, Ambient Temperature, Gravity, Gyroscope, Light, Linear-Acceleration, Magnetic Field, Type Orientation, Pressure, Proximity, humidity மற்றும் Temperature ன்னு எத்தனை விதமான சென்சார். எத்தனை விதமான உபயோகங்கள்? மூச்சு வாங்குகிறது அல்லவா.

சரி. இத்தனை விதமான சென்சார்கள். அதை உபயோகித்து நாம் எவ்வளவு கலோரிகள் ஒரு நாளில் எரிக்கிறோம் என்பதை அளக்க எத்தனை விதமான ஆப்கள் ? உதாரணமாக,  Runtastic Pro என்ற அப்ப்ளிகேசன் ஐ எடுத்துக் கொண்டால் அது நாம் நடப்பதை, ஓடுவதை, சைக்கிளிங் என பெரும்பாலான இயக்கங்களை பதிவு செய்கிறது. அதிலும் வேகமாக எவ்வளவு நேரம் ஓடி இருக்கிறோம். மெதுவாக எவ்வளவு நேரம் ஓடி இருக்கிறோம் மற்றும் சராசரி வேகம் முதலியவற்றை தெளிவாக நமக்கு காட்டுகிறது. இதே மற்றும் ஒரு  உணவுக்கட்டுப்பாடு ஆப் ஆன MyFitnessPal எடுத்துக் கொண்டால், ஒரு நாளில் எவ்வளவு உணவு உண்கிறோம் என்பதைப் பொறுத்தும் நமது உடற்பயிற்சி செயல்பாடுகளை வைத்தும் நாம் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள்ள உதவுகிறது. இதில் என்ன சிக்கல் என்றால், MyFitnessPal ம் Runtastic Pro ம் ஆரம்பத்தில் ஒன்றுகொன்று உரையாட முடியாமல் இருந்தது. பிறகு தனித்து வடிவமைக்கப்பட்ட API Interface கள் மூலமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு நமது உணவுக்கட்டுப்பாடும், உடற்பயிற்ச்சியும் இணைந்து செயல்பட முடிகிறது.

ஆனால், இதே போல் எத்தனை அப்ளிகேசன்கள்? ஒன்றோடொன்று இணைந்து செயல்பட ஒரு பொது பிளாட்பாரம் இருந்தால் எளிதாய் இருக்குமல்லவா? அது மட்டுமின்றி ஒரு அப்ளிகேசனில் இருக்கும் என்னுடைய தகவல்கள் மற்றொரு அப்ளிகேசன் ற்கும் அதாவது Runtastic எனக்கு பிடிக்கவில்லை அதற்க்கு பதிலாய் Nike+ அல்லது RunKeeper க்கு எனது தகல்வல்களை எளிதாய் மாற்றவும் அதன் மூலம் எனது எடைக் குறைப்பு மற்றும் ஆரோக்கிய கட்டுப்பாடுகளை தொடர்ந்து செய்யவும் வசதியாய் இருக்கும் தானே?

அதற்கெல்லாம் ஒரு ஆபத்பாந்தவனாய் வந்ததொரு பிளாட்பாரம் தான் Google Fit. இது உங்களுடைய அனைத்து உடற்பயிற்சி தகவல்களுக்கு ஒரு டேடாபேஸ். இதன் மூலம் நம்முடைய அனைத்து தகவல்களும் கூகிள் ன் தளத்தில் சேமிக்கப்படும்.  Developer கள் தனது அப்ளிகேசன்களை சிறப்பாய் வடிவமைப்பதை மட்டும் கவனத்தில் கொண்டால் போதுமானது. அதே போல் ஹார்ட்வேர்  (Nike, Fitbit, Garmin, Jawbone) போன்ற Activity Trackers ம் தனது ஹார்ட்வேர் ஐ சிறப்பாக வடிவமைப்பதை கவனத்தில் கொண்டால் போதுமானது. அந்த Data வை சேமிக்கும் வசதி (செர்வர்) , மற்ற அப்ப்ளிகேசன்களுடன் உரையாடும் வசதி பயனாளர்களுக்கு உயர்ந்த / பயனளிக்கும் முறையில் ரிப்போர்ட் முதலியவற்றை அளிக்கும் வசத்தில் அனைத்தையும் கூகிள் பிட் பிளாட்பாரம் வழங்குகிறது.

 

நம்மைப் போன்ற பயனாளர்களுக்கு சந்தேகமியின்றி இது ஒரு அற்புதமான வசதி. கீழ்க்கண்ட லிங்க் இல் நீங்கள் இதை டவுன்லோட் செய்யலாம்.

Comments

comments