ஒன்ப்ளஸ் ஒன் (OnePlus One) – பிரிமியம் மொபைல் போன் கில்லர்

நான் கேலக்சி s3 வாங்கி ஒன்னரை வருஷம் ஆச்சு. எனக்கு புது போன் வாங்கனும் ங்கற எண்ணம் எதுவும் இல்லை. நேற்று தான் s3 இல் சைனஜென்மாட் இன்ஸ்டால் செஞ்சு எல்லாம் கொஞ்சம் பள பள ன்னு மாற்றி வச்சு இருக்கேன். இருந்தாலும் மனுஷனுக்கு குரங்கு புத்தி இல்லையா.. புதுசா ஒரு போன் ஒன்ப்ளஸ் ஒன் என்று ஒரு போன் நாளை வெயிடப்போகிறார்கள். பிளாக்சிப் கில்லெர் என்ற அடைமொழியுடன் வெளிவந்திருக்கும் இந்த போன் என் விரதத்தை கலைத்து விடும் போலிருக்கிறது. ஏன் என்று பார்ப்போமா?

பீட் லா – ஆப்போ (Oppo) என்னும் மொபைல் நிருவனத்தில் வைஸ் ப்ரெசிடென்ட் ஆக வேலை செய்து வந்தார். ஹார்ட்வேர் எஞ்சினியர் ஆக வாழ்க்கையை ஆரம்பித்து ப்ளுரே ப்ளேயர் நிறுவனத்தின் இயக்குனராய் பணியாற்றி பின்னர் ஆப்போ வில் சேர்ந்திருந்தார். கடந்த நவம்பரில் அவர் வேலையை ராஜினாமா செய்த போது தான் OnePlus என்றொரு கம்பெனியை ஆரம்பிக்கவிருப்பதாக கூறினார். ஆப்போ மொபைல் ஐ மிகச்சிறப்பாக வடிமைத்திருந்தும் கூட அவருக்கு திருப்தி இல்லை.
அனைவருக்கும் மிகச்சிறப்பான டெக்னாலஜி சென்று சேர வேண்டும் என்பதை தன் கனவாக கொண்டிருப்பதாகவும் அந்த கனவை பூர்த்தி செய்யவே OnePlus என்றொரு கம்பெனியை ஆரம்பித்திருப்பதாக கூறினார்.

சரியாய் நான்கரை மாதங்கள். இதோ அவரின் கனவு செல்போன். OnePlus one.

Oneplus one சைனஜென்மாட் என்னும் ஆண்ட்ரைடு வெர்சன் உடன் வெளியிடப்படுகிறது. ஹார்ட்வேர் ஸ்பெக்ஸ் பார்க்கும் போது வாவ். வாவ். வாவ்.. அட என வாய்பிளக்க வைக்கிறது. அதுவும் காண்ட்ராக்ட் இல்லாமல் பிரிமியம் க்வாலிட்டி போன் $299 க்கு கிடைக்கிறது என்றால்?

கேமரா

ஒரு ஸ்மார்ட் போன் அதுவும் பிரிமியம் மொபைல் போன் என்றால் அதன் மிக முக்கியமான அம்சமாய் கேமரா வைத்தான் பார்ப்போம். பொதுவாக விலை மலிவான போன்களில் எல்லாம் வெறும் ஐந்து மெகாபிக்சல் காமெரா இருப்பதே வழக்கம். சில போன்களில் எட்டு மெகாபிக்சல் கேமெரா இருந்தாலும் அதில் எடுக்கும் போட்டோ க்கள் படுதிராபையாய் இருக்கும். அனால் ஒன்ப்ளஸ் ஒன் இல் 13 MEGAPIXEL SONY EXMOR IMX214 இருப்பதோடு மட்டுமல்லாமல் அதில் ஆறு பிசிகல் லென்ஸ் இருக்கிறது.

பேட்டரி

3100 mAh பேட்டரி ஒரு நாள் முழுவதும் தாங்கும் என்ற உறுதி மொழியுடன்.

வீடியோ
படங்கள்
ஒரு டாலர் க்கு இந்த போன் வாங்கனுமா? இந்த லிங்க் க்கு போங்க.

மேலும் ஸ்பெக்ஸ் க்கு கீழே உள்ள டேபிள் ஐ பாருங்கள். இப்ப சொல்லுங்க. இந்த போன் வாங்கலாமா வேண்டாமா என்று?

Samsung Galaxy S5 க்கும் OnePlus one க்கும் ஒரு கம்பேரிசன்

Comments

comments