ஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.

ஆண்ட்ரைடு இல் லாஞ்சர் என்றால் உங்களுக்கு என்னவென்று தெரிந்து இருக்கும் அல்லவா? தெரியாதவர்களுக்காக ஒரு சிறு குறிப்பு. விண்டோஸ் ன் டெஸ்க்டாப் போல ஹோம்ஸ்க்ரீன் தான் ஆண்ட்ரைடு ன் லாஞ்சர். விண்டோஸ் இல் உங்கள் டெஸ்க்டாப் ஐ எப்படி எல்லாம் மேம்படுத்திக் கொள்ளமுடியுமோ அதே போல் ஆண்ட்ரைடு இல் உங்களுடைய ஹோம் ஸ்க்ரீன் அல்லது டெஸ்க்டாப் ஐ விதவிதமாய் மேம்படுத்திக் கொள்ள முடியும். உதாரணமாக உங்களது அப்ளிகேசன் ஐகான்ஸ் எப்படி தெரிகிறது அல்லது எப்படி உங்களது அப்ளிகேசன்ஸ் வரிசைப்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.

ஆண்ட்ரைடு ன் மிக முக்கிய பலமே அதன் customization தான். ஒரு அப்ளிகேசனின் ஐகான் முதல், அது எப்படி தோன்றுகிறது, அது எப்படி இயங்குகிறது என அனைத்தையும் நம்மால் Customize செய்து கொள்ள முடியும்.. அது சரி ஆண்ட்ரைடு லாஞ்சர் ஏன் மிக முக்கியம்?

ஆப்பிள் ஐப் பொறுத்த வரை அவனே ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் இரண்டும் செய்வதால், அவனால் அனைத்து டிவைஸ் களிலும் ஒருமித்த ஒரு இன்டர்பேஸ் ஐ கொடுக்க முடிகிறது. ஆனால், ஆண்ட்ரைடு சேம்சங், HTC, மோட்டோ என பல ஹார்ட்வேர் வெண்டர் களை கொண்டிருக்கிறது. அதிலும் ஒரே மாதிரியான இன்டர்பேஸ் ஐ கொடுத்தால் மக்கள் எல்லாம் ஒன்னுதாம்ப்பா இதுக்கும் அதுக்கும் என்ன வித்தியாசம் பெருசா ஒன்னும் இல்ல என்று போய்கிட்டே இருப்பார்கள். பார்த்த உடனே வித்தியாசம் தெரியனும் அல்லவா? எனவே தான் சேம்சங் டச்விஸ்(touchwiz) என்றும் HTC சென்ஸ் (sense) என்றும் தன்னை வித்தியாசமாய் காண்பித்துக் கொள்ள லாஞ்சர் ஐ customize செய்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் toucewiz ஐ ஒரு குப்பை என்றே நான் கூறுவேன். நான் கூகிள் லாஞ்சர் ன் பரம விசிறி.

சரி உங்களுக்கும் சேம்சங் அல்லது HTC ன் லாஞ்சர் பிடிக்கவில்லை எனில் என்ன செய்வது. ஆண்ட்ரைடு ஓபன் சோர்ஸ் என்பதால் கூகிள் ன் லாஞ்சர் நிகர் மென்பொருளை ஐ கூகிள் ப்ளே ஸ்டோர் இல் இருந்து நீங்கள் பெறலாம். எனக்குப் பிடித்த லாஞ்சர் (தர வரிசையின்றி)

1. Apex Launcher
2. Nova Launcher
3. Atom Launcher
4. Buzz Launcher

 

இதில் Go Launcher தெரிந்தே தான் விடுபட்டு போயிருக்கிறது. மிக நிறைய customization வசதி இருந்தாலும் அதுவும் சேம்சங் ன் டச்விஸ் போல தேவயில்லாதா பல குப்பைகளை தன்னிடத்தே கொண்டுள்ளதால் எனக்கு பிடிக்காத ஒன்று.
Buzz Launcher ஆண்ட்ரைடு லாஞ்சர் ன் கட்டற்ற customization வசதிக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதைப்பற்றி மிகவிரிவான ஒரு பதிவு வெகு விரைவில்.

Comments

comments