அடோப் பில் அண்ட் சைன் – Adobe fill & Sign அறிமுகம்

முன்பெல்லாம் ஏதாவது ஒரு அப்ளிகேசன் அனுப்ப வேண்டுமெனில், படிவத்தை கைகளால் நிரப்புவதும் அதன் பின்னர் அதைத் தபாலில் அனுப்புவதுமாக இருப்போம். தகவல் தொழில்நுட்பத்தில் வசதியால் பின்னர் அதை பேக்ஸ் அதனைத் தொடர்ந்து ஸ்கேன் செய்து அனுப்புவதும் வாடிக்கையாயிற்று.  அலுவலகத்தில் படிவம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை. அதை PDF இல் அனுப்பி இருந்தார்கள். அதை பிரிண்ட் அவுட் எடுத்து நிரப்பி பின்னர் ஸ்கேன் செய்து அனுப்புவது வாடிக்கை எனினும் எனக்கு டைப் செய்து அனுப்பினால் தெளிவாய் இருக்குமே என்னும் நோக்கத்தில் PDF editor ஐத் தேடினேன். இலவசமாய் கிடைத்தது பாக்ஸ் இட் . மிகவும் அருமையான எளிமையான PDF editor. ஆனால் இது டெஸ்க்டாப் கணினிகளுக்கு மட்டுமேயானது. மேலும் படிவத்தை நிரப்பியவுடன் அதைப் பிரிண்ட் அவுட் எடுத்து கையொப்பமிட்டு அனுப்ப வேண்டியதிருந்தது.

இரு நாட்களுக்கு முன் Adobe நிறுவனத்தால் செல்பேசிகளுக்கென அறிமுகப்படுத்தப்பட்ட அப்ளிகேசன்  தான் Adobe fill & Sign. இதில் நமக்குத் தேவையான படிவங்களை நிரப்பிக் கொள்ளமுடியும். உதாரணமாக படிவத்தை புகைப்படம் எடுத்து அதை இந்த அப்ளிகேசன் மூலமாக fill செய்ய முடியும். எங்கெங்கு தேவையோ அங்கெல்லாம் நீங்கள் ஒரு கிளிக் செய்தால் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் தோன்றும். நீங்கள் அதில் உங்கள் பெயர் முதலியவற்றை உள்ளீடு செய்து கொள்ள முடியும். மேலும் நீங்கள் அடிக்கடி உபயோகிக்கும் பெயர், முகவரி, DOB முதலியவற்றை சேமித்து வைத்துக் கொண்டு ஒரு கிளிக் மூலம் டைப் செய்யாமல் படிவத்தில் நிரப்ப இயலும். custom field ஆப்சன் மூலமாய் நீங்கள் உங்களுக்குத் தேவையான எண்ணற்ற பிற தகவல்களையும் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.  நீங்கள் உங்கள் படிவத்தின் அளவிற்கு ஏற்ப எழுத்துருவை அதிகப்படுத்தவும், குறைக்கவும் இயலும். டெக்ஸ்ட் பாக்ஸ் ஐ சரியாய்ப் பொருத்த ட்ராக் மற்றும் டிராப் வசதியும் உண்டு.

முத்தாய்ப்பாய் உங்கள் கையெழுத்தை இதில் சேமித்து வைத்து அதை சரியான இடத்தில் பொருத்த வசதியும் உண்டு.

இது பீட்டாவாய் வந்திருக்க வேண்டிய ஆப். அந்த அளவிற்கு பிரச்சினைகள் உள்ளன.  இருப்பினும் எதிர்காலத்தில் ஒவ்வொன்றாய் களையப்பட்டு விடும் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்.

கேலரி:

தரவிறக்க:

‎Adobe Fill & Sign
‎Adobe Fill & Sign
Developer: Adobe Inc.
Price: Free

Comments

comments