அக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்

எனக்கு அடிக்கடி தண்ணீர் குடிக்கும் பழக்கமில்லை. காலையில் அரை லிட்டர் குடித்தால் சில சமயம் மதியம் சாப்பாட்டுக்குப் பிறகு. அதுவும் இல்லை என்றால் காபியில் இருக்கும் தண்ணீர் அல்லது எதுவும் பழச்சாறு குடிக்கும் போது அதில் இருந்து கிடைப்பது தான். இரவு சாப்பாடு முடிந்து கொஞ்சமாய் குடித்து விட்டு படுத்து விடுவேன். இல்லையென்றால் யார் அடிக்கடி எழுந்திருப்பது? அடிக்கடி இரவு தாகம் எடுக்கும். எழுந்து தொண்டையை நனைத்துக் கொண்டு படுத்து விடுவது.

கடந்த இரு மாதங்களாக காபி குடிப்பதை நிப்பாட்டி விட்டேன். அதன் மூலம் கிடைத்து வந்த தண்ணீரும் நின்று போனது. இதற்கிடையில் அடிவயிறில் சுரீரென்று வலி எடுக்க ஆரம்பித்தது. எங்கே சிறுநீரகக் கல்லோ என்று பயம் வந்தது. ஆனால் நான்கைந்து நாட்களில் அது சரியாய்ப் போனது. என்ன புதிதாய் உண்ண ஆரம்பித்தேன் என்று யோசித்த போது கேழ்வரகு அதிகமாய் உணவில் சேர்க்க ஆரம்பித்து இருந்தேன். எனக்கு சிறு வயதில் இருந்தே ஒத்துக்காத தானியம் அது. அதை நிப்பாட்ட தானாக வலி குறைந்து போனது.,

இருப்பினும் எனது அப்பா, எனது நண்பர்களில் பலர் சிறுநீரகக் கல்லினால் பட்ட அவதியை பார்த்தவன் என்பதால், இனி தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என முடிவெடுத்து அதை நினைவூட்ட எதுவும் ஆப் இருக்கிறதா என தேடிய போது கிடைத்தவை இரண்டு.

Water Your Body மற்றும் Aqualert.

இதில் water your body இன் UI அவ்வளவு வசதியாக இல்லை எனக்கு,. மேலும் அதில் வரும் அட்வர்டைஸ்மென்ட்கள் எரிச்சலூட்டுபவையாக இருந்தன. ப்ரோ வெர்சன் வாங்கலாம் என்றால் $5.99 என்பதால் விருப்பமில்லை.

Aqualert மிக அற்புதமான மற்றும் கையாள எளிமையான டிசைன் கொண்டு இருப்பதால் பார்த்த உடனே பிடித்துப் போயிற்றும் . மேலும் தண்ணீர் குடிப்பதற்கும் நமக்கு இலக்கு நிர்ணயித்து உதாரணமாக பத்து நாட்கள் தொடர்ந்து தண்ணீர் குடித்தால் Restore Balance, இருபது நாள் Body Function என நமக்கு உற்சாகம் கொடுக்கும் வகையில் செய்திகளைத் தருகிறது.

செட் அப் மிகவும் எளிது. நமது எடையை அளிக்கும் பட்ச்சத்தில் தானாய் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை சொல்கிறது. கூகிள் பிட் உடன் ஒருங்கிணைத்தால் நமது செயல்பாடுகளைப் பொறுத்து (dehydration) தண்ணீரின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ செய்வது மிகவும் வசதியான பயன்பாடு.

என்னடா தண்ணீர் குடிக்க ஒரு ஆப் ஆ? ஓவர் ஆ தெரியல என்பவர்களுக்கு , சிலருக்கு எதையுமே நியாபகப்படுத்த வேண்டி இருக்கும். சிலர் அலுவலகத்தில் சென்று கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்தால் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். அவர்களுக்கு மிகத் தேவையான ஒரு ஆப்..

இதன் விளம்பரமில்லா ப்ரோ வெர்சன் ஐ $.99 க்கு வாங்கலாம்.

புகைப்படத் தொகுப்பு:

‎Aqualert : Wassertrinken
‎Aqualert : Wassertrinken

Comments

comments