MyFitnessPal – ஆரோக்கியமான வழியில் உணவுக் கட்டுப்பாடு/ எடைக் கட்டுப்பாடு உங்கள் கைகளில்

உடல் எடையை குறைப்பது எளிதன்று. டயட் என்ற பெயரில் தன்னை வருத்திக் கொள்வதுடன் தன் உடலையும் தன்னை அறியாமல் வருத்திக் கொள்பவர்கள் தான் அதிகம். டயட் என்பதற்கு பெயர் சாப்பிடாமல் இருப்பதல்ல. சரிவிகித உணவை உட்கொள்வதற்க்குப் பெயர்தான் டயட். ஆனால் எத்தனைபேருக்கு நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம்? அதில் என்ன சத்துக்கள் உள்ளது?. எது அதிகமாக சாப்பிடுகிறோம்? எது குறைவாக சாப்பிடுகிறோம் என்பது பெரும்பாலும் தெரியாது அல்லது தெரிந்து கொள்ள விரும்புவதில்லை.

உங்களது உணவு பழக்கவழக்கத்தில் சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் ஆரோக்கியமான முறையில் உங்கள் எடையை நீங்கள் எளிதாக குறைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

MyFitnessPal என்ற அப்ளிகேசன் ஆண்ட்ரைடு மற்றும் ஆப்பிள் ஸ்டோர் இல் கிடைக்கிறது, நீங்கள் பேஸ்புக் அப்ளிகேசன் மூலமோ அல்லது Myfitnesspal அக்கவுண்டை ஐ உருவாக்கியோ இதில் இணைந்து கொள்ளலாம். நீங்கள் இணையும் போது உங்களுக்க்டைய தற்போதைய எடை மற்றும் நீங்கள் குறைக்க எண்ணியுள்ள எடை ஆகியவற்றை கேட்கும். உதாரணமாக நீங்கள் 90 கிலோ இருப்பதாகவும் நீங்கள் 80 கிலோ அளவிற்கு உடல் எடையை மூன்று மாதங்களில் குறைக்க விரும்புவாதாக உள்ளீடு செய்தால் ஒரு நாளில் நீங்கள் எத்தனை கலோரி அளவிற்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்பதை உங்கள் இலக்காக நிர்ணயிக்கும்.

பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், அந்த கலோரி க்குள் நீங்கள் சாப்பிடவேண்டியதுதான்.

மொத்த கலோரிகள் = நீங்கள் உட்கொண்ட கலோரிகளின் அளவு – உடற்பயிற்சி கலோரிகளின் அளவு

நீங்கள் ஒவ்வொரு வேளையும் உங்களது உணவுப்பழக்க வழக்கத்தை உள்ளீடு செய்து வரவேண்டும். இந்த அப்ளிகேசனின் மிகப்பெரிய பலமே அதன் உணவுப் பொருட்கள் டேட்டாபேஸ் தான். பெரும்பாலான இந்திய உணவுகளின் கலோரிகள் இதில் உள்ளன. எனவே நீங்கள் உங்கள் உணவுகளை உள்ளீடு செய்வது மிக மிக சுலபம். உங்களது கலோரி இலக்கிற்குள் நீங்கள் சாப்பிட்டு வந்தால் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் உங்கள் உடல் எடை குறைவது நிச்சயம்.

ஒவ்வொரு நாளும் நீங்கள் என்னென்ன சத்துக்கள் உட்கொள்கிறீர்கள். என்பதை அழகான / தெளிவான சாட் உங்களுக்கு தெரிவித்து விடும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், அந்த சாட் ஐ பார்த்து உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றவேண்டியது தான்.

இந்த அப்ளிகேசனின் மற்றும் ஒரு முக்கிய பலம் மற்ற உடற்பயிற்சி அப்ளிகேசன் களின் இண்டக்ரேசன். உதராணத்திற்க்கு கீழ்க்கண்ட பிரபல உடற்பயிற்சி அப்ளிகேசன்கள்:

  • FitBit
  • Runtastic
  • Jawbone
  • RunKeeper
  • MapMyFitness
  • MayMyRider
போன்ற அனைத்தும் இந்த அப்ளிகேசன் உடன் உரையாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் செய்யும் உடற்பயிற்சி கலோரிகள் தானாகவே MyFitnessPal இல் உள்ளீடு செய்யப்பட்டு விடும்.

மிக முக்கியமாக இது ஒரு இலவச அப்ளிகேசன்.

இதை உபயோகிக்க முக்கிய காரணங்களாக நான் குறிப்பிட விரும்புவது

  • எளிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது
  • மிகப்பெரிய உணவுப்பொருள் டேடாபேஸ் ஐ கொண்டுள்ளது
  • உங்களது தனி உணவுப் பொருள் டேட்டாபேஸ் ஐ வடிவமைத்துக் கொள்ள முடியும்
  • இலவச மென்பொருள் (வெப் / ஆண்ட்ரைடு / ஐபோன்)
  • சமூக வலைத்தள இணைப்பு – உங்கள் நண்பர்களுடன் குழுவாக இணைந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் ஊக்கம் பெறலாம்.
கடந்த ஜனவரி இறுதியில் 202 பவுண்டுகள் இருந்த நான் இரு மாதங்களில் இருபத்தி இரண்டு பவுண்டுகள் குறைந்து 180 பவுண்டுகள் ஆக இந்த அப்ளிகேசன் உதவியது என்று நான் சொல்வது உங்களுக்கும் ஊக்கமளிக்கும் என நம்புகிறேன்.

புகைப்படங்கள்
தமிழ் கேட்ஜெட்ஸ் ரேட்டிங்
உபயோகிக்க: (4.5 / 5)
விலை: (4.5 / 5)
டிசைன்: (4.8 / 5)
Average: (4.6 / 5)

டவுன்லோட் செய்ய:

MyFitnessPal
MyFitnessPal
Developer: MyFitnessPal.com
Price: Free+

 

Comments

comments