Moto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ

இரு வாரங்களுக்கு முன் MOTO E ரிலீஸ் செய்யப்பட்டதை அறிந்திருப்பீர்கள், விலை மலிவான ஸ்மார்ட் போன்களுக்கு என ஒரு சந்தை உண்டு. முக்கியமாக சைனா மற்றும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது போன்ற போன்களுக்கேன நல்ல சந்தை உள்ளது., அந்த மார்க்கெட்டைத் தான் கொரியாவைத் சேர்ந்த சேம்சங் (38%), அதனைத் தொடர்ந்து Micromax (16%), Karbonn (10%), Sony (5%) and Lava (4.7%) கைப்பற்றி தன்னகத்தே வைத்துள்ளது,. இப்போது அந்த சந்தையைத் தான் நோக்கியா வும் மோட்டோ வும் பிடிக்க போராடிக் கொண்டிருக்கின்றன.

அதன் முதல் படியாக நோக்கியா பல விலைகுறைவான விண்டோஸ் போன்களை வெளியிட்டு இருந்தாலும் இந்தியாவின் சந்தை ஆண்ட்ரைடு போன்களிடம் இருப்பதை உணர்ந்து நோக்கியா X என்று ஆண்ட்ரைடு OS ஐ அடிப்படையாகக் கொண்டு வெளியிட்டது. மோட்டோ வும் MOTO வும் மோட்டோ G என்ற மாடலை வெளியிட்டது.

இப்போது அதை விட விலை குறைவாக Rs. 6999 க்கு மோடோ E ஐ வெயிட்டுள்ளது.. பெரும்பாலான விலை குறைவான போங்கள் 512KB ராம் ஐயே கொண்டிருக்கும். ஆனால் MOTo E 1 GB ராம் உடன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பம்சங்கள்:

டிஸ்ப்ளே:

MOTO X ஐ விட சற்றே சிறியது. 4.3in 540 x 960 qHD display 256 pபி ஐ கொண்டிருக்கிறது. மற்ற விலைகுறைவான மொபைல்களைப் பார்க்கும் போது மொபைல் சைஸ் ஒரே கையில் ஆபெரெட் செய்ய ஏதுவாகவும், மலிவான மொபைல் என்று நம்ப முடியாத அளவிற்கு தெள்ளத் தெளிவான டிஸ்ப்ளே ஐயும் கொண்டிருக்கிறது. கொரில்லா க்ளாஸ் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் கீறல்கள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.

Build Quality:

மலிவான போன்களின் மிக முக்கிய குறைப்பாடே அதன் பில்ட் க்வாலிடி தான். ஆனால் இது மிகவும் உறுதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனால் சிறிது எடை ( 142G) அதிகமாகவும் உள்ளது.

பேட்டரி:

ஒரு நாள் முழுவதும் வரும்படி உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது உபயோகத்தைப் பொறுத்து மாறுபடும்

ஓஎஸ்

மிக லேடஸ்ட் ஆண்ட்ரைடு கிட்காட் 4.4 வெர்சன் உடன் வந்துள்ளது.

குறைகள்:

போன் இன்டெர்னல் மெமரி 4GB மட்டுமே. அதில் இரண்டு ஜிபி ஆபெரேடிங் சிஸ்டம் எடுத்துக் கொள்ளும். ஆனால் போன் SD கார்டு சப்போர்ட் இருக்கிறது. நீங்கள் 32 GB வரை SD கார்ட் இணைத்துக் கொள்ளலாம். மேலும் மோட்டோ Phone to SD கார்ட் என்ற சிறப்பு ப்ரோக்ராம் ஐ தன்னகத்தே கொண்டுள்ளது. அது உங்களுடைய அப்ளிகேசன் ஐ எஸ்டி கார்டில் சேமிக்க உதவுகிறது. தேவைப்படும் போது அங்கிருந்து RAM ற்கு கொண்டுவந்து இயக்கப்படும்.

கேமெரா வில் ப்ளாஷ் இல்லை.

பிரன்ட் கேமெரா இல்லை.

பின் குறிப்பு:
வெளியிட்ட முதல் நாளே FlipKart இல் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

Comments

comments