Fing உங்கள் வை-பை (WiFi) நண்பன்.

நாளுக்கு நாள் இணையத்துடன் இணைந்து செயல்படும் கருவிகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஸ்மார்ட் போன், லேப்டாப், நெட்வொர்க் பிரிண்டர், டேப்லெட் ஆகிய கருவிகளின் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது.

என் வீட்டில் மொத்தம் பத்திற்கும் மேற்பட்ட கருவிகள் உண்டு. இதில் மூன்று கருவிகளுக்கு ஸ்டேடிக் ஐபி முகவரி , மற்ற எல்லா கருவிகளுக்கும் டைனமிக் ஐபி முகவரி கொடுத்துள்ளேன். பத்திற்கும் மேற்பட்ட கருவிகள் ரவ்ட்டரில் (router) இணைக்கபட்டுள்ளதாள் அடிக்கடி பிரச்சனைகள் வரும். உதாரணமாக ஐபி conflict மற்றும் ஐபி renewal. ஒவ்வொரு முறையும், எத்தனை கருவிகள் இணைந்துள்ளது? ஏதேனும் கருவியின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதா? என்று ஆராய்வு செய்வதற்குள் தலை சுற்றிவிடும்.

இப்பிரச்சனைகளை எளிதாக அறிய ஒரு ஆப் தேவைப்பட்டது. கூகிள் செய்து Fing என்ற ஆப்பை எனது நேக்சஸ் 5 வில் பதிவிறக்கம் செய்தேன். Fing ஒரு எளிதாக வடிவமைக்கப்பட்ட ஆப். வீட்டின் வை-பையில் இணைந்துள்ள ஏனைய கருவிகளின் தகவல்களை நொடியில் ஆராய்ந்து கொடுத்துவிடும். கருவியின் மேக், மாக் ஐடி, ஐபி முகவரி, பகிர்ந்திருக்கும் சேவைகள் போன்று மேலும் பல தகவல்களை கொடுத்துவிடும். இந்த ஆப்பை பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து பிரச்சனைகள் கண்டறிதல் எளிதானது. ஒவ்வொரு ஸ்மார்ட் கருவிகளுக்கும் பார்த்தவுடன் அறிய புனைபெயர்கள் வைத்துக்கொள்ளலாம். இந்த ஆப் ஐபேட், ஐபோன் னிலும் பதிவிறக்கம் செய்யலாம். மேலும் விண்டோஸ், மேக் & லினக்ஸ் அப்பெரடிங் சிஸ்டம் காகவும் ஓவர்லுக் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டுள்ளது

பயன்பாடுகள்
  • உங்கள் வை-பை பிணையத்தில் சேர்ந்திருக்கும் அணைத்து கருவிகளை ஆராய்தல்.
  • உங்கள் வீட்டின் வை-பை அத்துமீறி உபயோகிப்பவர்களை அறிதல்.
  • உங்களின் விரல் நுனியில், அனைத்து ஸ்மார்ட் கருவிகளின் நிலைமை அறிதல்.
  • லேப்டாப், டெஸ்க்டாப் தேவையான சேவையை மட்டும் பகிர்கிறதா என்று அறிதல்.
புகைப்படங்கள்
வீடியோ

 

டவுன்லோட் செய்ய

Fing - Netzwerk-Scanner
Fing - Netzwerk-Scanner
Developer:
Price: Free
Fing - Netzwerk-Scanner
Fing - Netzwerk-Scanner
Developer: Fing Limited
Price: Free

Comments

comments