Find My iPhone – தெரிந்து கொள்ள வேண்டிய வசதி

நண்பர்களிடம் கூகுள் ப்ளஸ்ஸில் உரையாடிக் கொண்டிருந்த போது ஐபேட் அல்லது ஐஃபோன் வைத்திருக்கும் நண்பர்கள் பலருக்கு Find My iPhone என்ற வசதி இருப்பது தெரியாமலே இருக்கிறது. இது ஐஓஎஸ்ஸில் அறிமுகப் படுத்தப்பட்டு அமுக்கமாக ஆண்ட்ராயிடில் காப்பி அடிக்கப்பட்ட ஒரு சிறப்பு அம்சம். ஆப்பிள் சாதனங்கள் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு வசதி.

உங்கள் ஆப்பிள் சாதனம் – ஐபேடோ, ஐஃபோனோ, ஐபாட்-டச்சோ, இல்லை மேக் புக்கோ, தொலைந்து போனால் அதைக் கண்டுபிடிக்கவும், ஒரு வேளை திரும்ப வாங்கமுடியாத நிலையில் அந்த சாதனத்தில் இருக்கும் நமது தனிப்பட்ட தகவல்கள் – புகைப்படங்கள், வீடியோ, காண்டாக்ட்ஸ் – அனைத்தையும் நீங்கள் இருக்குமிடத்தில் இருந்தே அழித்துவிடவும் ஆப்பிள் கொடுத்த வசதிதான் FindMyiPhone.

இதற்கு முதலில் உங்கள் சாதனத்தில் FindMyIphone வசதியை துவக்கியிருக்க வேண்டும்.

உங்கள் ஐஓஸ் சாதனத்தில் Settings -> iCloud என்ற மெனுவுக்கு செல்லுங்கள். அந்த பக்கம் உங்கள் Apple Idல் லாகின் செய்யச் சொல்லும். நீங்கள் ஏற்கனவே Apple Id உருவாக்கியிருக்காத பட்சத்தில் Get Free Apple Id என்ற பொத்தானை அழுத்தி உருவாக்கிக் கொள்ளலாம்.

லாகின் செய்த பிறகு, அந்த மெனுவில் Find My iPhone என்ற வசதி துவக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து, துவக்கியிருக்கப்படாத பட்சத்தில் அதைத் துவக்கிக் கொள்ளவும்.

இனி உங்கள் ஃபோன் தொலைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

Mein iPhone suchen
Mein iPhone suchen
Developer: Apple
Price: Free

Find My iPhone என்ற App AppStoreல் கிடைக்கும். அதை உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் நிறுவிக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிள் சாதனங்கள் வைத்திருப்பவராக இருந்தால் தொலைந்து போன ஆப்பிள் சாதனத்தை இன்னொரு ஆப்பிள் சாதனத்தில் நிறுவியுள்ள Find My iPhone App மூலமே நீங்கள் கண்டுபிடிக்கலாம்.

ஒரே ஒரு ஆப்பிள் சாதனம் தான் வைத்திருப்பவர் என்றாலும் கவலை இல்லை. உங்களிடம் உள்ள கணினியில் நிறுவியுள்ள ஏதாவது ஒரு பிரவுசரை துவக்கி, www.icloud.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள்.

மேலே காட்டப் பட்டுள்ள பக்கத்தில் உங்கள் ஆப்பிள் ஐடியை (உங்கள் ஃபோனில் லாகின் செய்த அதே ஆப்பிள் ஐடி) உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.

லாகின் செய்ததும் க்ளவுடில் இருக்கும் உங்கள் தகவல்கள் அனைத்தும் தெரியும்.

 

இதில் Find My iPhone என்றிருக்கும் அந்த ஐகானை அழுத்தினால், நீங்கள் லாகின் செய்த ஆப்பிள் ஐடியில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் தெரியும்.

 

இதில் நீங்கள் தேடும் சாதனத்தை அழுத்தினால் அந்த சாதனம் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் காட்டும்.

 

இப்போது அந்த சாதனத்தின் கீழ் Play Sound, Lock, Erase Mac(அல்லது ஐஃபோன்) என்ற பொத்தான்கள் மூன்று இருப்பதைப் பார்க்கலாம்.

Play Sound

இந்தப் பொத்தானை அழுத்தினால், உங்கள் ஃபோன் சைலண்ட் மோடிலோ, வைப்ரேஷன் மோடிலோ எந்த மோடில் இருந்தாலும் ஒரு பீப் சத்தத்தை வெளிப்படுத்தும். நீங்கள் அந்த சாதனத்தை எடுத்து அன்லாக் செய்யும் வரை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். சத்தம் அணைக்கப்பட்ட உடன், உங்கள் ஆப்பிள் ஐடியோடு இணைந்த ஈமெயிலுக்கும் ஒரு மெயிலைத் தட்டி விடும்.

Lost Mode (Mac bookக்கு Lock)

இந்த வசதி, உங்கள் ஃபோனை லாக் செய்துவிடும். லாக் செய்வது மட்டுமில்லாமல் உங்கள் ஃபோனை எடுத்தவர் (அல்லது திருடியவர்) Location Services (GPS)ஐ நிறுத்தியிருந்தாரானால், தானாகத்துவக்கிவிடும். ஒருவேளை நீங்கள் பாஸ்கோட் எதுவும் தராமல் வைத்திருந்தால், இப்போது ஒரு பாஸ் கோட் கொடுத்து உங்கள் சாதனத்தை லாக் செய்து கொள்ளலாம்.

உங்களிடம் ஒரு ஃபோன் நம்பரையும் கேட்கும். நீங்கள் தரும் ஃபோன் நம்பரை தொலைந்து போன சாதனத்தில் display செய்த வண்ணம் இருக்கும். அந்த நம்பரை அழுத்துவதன் மூலம் உங்கள் ஃபோனைக் கண்டெடுத்தவர் உங்களுடன் பேச முடியும்.

உங்களிடம் ஒரு Custom Messageஐயும் கேட்கும். நீங்கள் தரும் செய்தியை ஃபோனின் திரையில் ஒளிரவிட்ட வண்ணம் இருக்கும்.

Erase

இது உங்கள் ஃபோனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அழித்துவிட உதவும். இதன் மூலம் தங்களது சென்சிட்டிவ் தகவல்கள் தவறானவர்கள் கையில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.

என்ன இருந்தாலும் ஃபோன் தொலைந்ததை உடனே நீங்கள் உணர்ந்து மேலே உள்ள நடவடிக்கைகளை எடுத்தால் தான் உங்கள் ஃபோனை மீட்கவோ அல்லது தகவல்களைக் காப்பாற்றவோ முடியும். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.

டிவிட்டர் இணையதளத்தில் பங்காற்றும் ஒருவர், வாஷிங்க்டன் டிசியில் ரயிலில் வரும்போது அவரது ஃபோனைத் தவற விட்டு விட்டார். எந்த ஸ்டேஷனில் காணாமல் (அல்லது திருடப்பட்டு) போய் இருக்கலாம் என்பதை உணர்ந்த அவர் உடனடியாக Find My iPhoneஐத் தட்டி தன் ஃபோன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த இருப்பிடத்தை ட்விட்டரில் தெரிவிக்க. அவரது ட்விட்டர் ஃபாலோயர்ஸ் அந்த ட்விட்டை ரீட்வீட் செய்ய, ஃபோன் இருக்கும் நகரத்தைச் சேர்ந்த அவரது ட்விட்டர் ஃபாலோயர் ஒருவர் போலீசுக்குத் தகவல் தெரிவித்து போலீசை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கே சென்று விட்டார். ஃபோனுக்குச் சொந்தக்காரர் தொடரந்து Play Soundஐ அழுத்திக்கொண்டே இருந்தார். போலிஸ் வரவும் சுதாரித்த திருடன், வீட்டுக்கு வெளியே ஃபோனை விட்டெறிந்து விட்டான். ஆனால் ஃபோன் தொடர்ந்து எழுப்பிய ஒலியை வைத்து புல் வெளியில் கிடந்த ஃபோனைக் கண்டெடுத்த போலிஸ் ஃபோன் உரிமையாளர் சொன்னதன் பேரில் அவரது ட்விட்டர் ஃபாலோயரிடம் ஒப்படைத்தது. அந்த ஃபாலோயரும் Fedexல் ஃபோன் உரிமையாளருக்கு அடுத்த நாளே சென்று சேரும் வண்ணம் ஃபோனை அனுப்பி வைத்துவிட்டார்.

ஃபோனை எப்போது என்னுடனே ஏந்திக்கொண்டு திரியும் பழக்கம் உள்ளவன் நான். பல நேரங்களில் வீட்டுக்குள்ளேயே எங்காவது வைத்துவிட்டு எங்கே வைத்தேன் என்று தேட Find My iPhoneஐ உபயோகிக்கிறேன். கார் சாவிக்கும், வாலெட்டுக்கும் இது போல ஏதாவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்த வசதி Find My iPhone.

Comments

comments