Buzz லாஞ்சர் – ஆண்ட்ரைடு Customization ன் உச்சம்

மற்ற மொபைல் இயங்குதளங்களுக்கும் ஆண்ட்ரைடு இயங்குதளத்திற்கும் உள்ள வித்தியாசமே அதன் கட்டற்ற customization  தான் என்பதை போன பதிவில் பார்த்தோம். Buzz Launcher ஆண்ட்ரைடு ன் அதற்க்கு மிகச்சிறந்த ஒரு எடுத்துக்காட்டு. எத்தனயோ லாஞ்சர் இருக்கும்போது இதற்க்கு மட்டும் என்ன அப்படி ஒரு சிறப்பு? அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் பின்னே இருக்கும் மிகப்பெரிய community. உங்களுடைய ஆண்ட்ரைடு செல்போன் ன் பழைய அலுத்துப் போன லுக் அண்ட் பீல் ஐ மாற்றி ஒரு புதிதானா அல்டிமேட் லுக் ஐ கொடுக்கவேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் buzz launcher ஐ டவுன் லோட செய்ய வேண்டியது தான்.

கிட்டத்தட்ட 65000+ விதமான ஹோம் ஸ்க்ரீன்கள்  லிருந்து நாம் நமக்கு தேவையானதை தேர்ந்தேடுக்கொள்ள முடியும்.

முதலில் இங்கிருந்து buzz launcher ஐ டவுன்லோட் செய்யவும்

இன்ஸ்டால் செய்யும்போது அதன் predefined ஹோம் ஸ்க்ரீன் இல் இருந்து ஏதேனும் ஒன்றை நீங்கள் செய்துகொள்ளலாம். கீழே உள்ள இமேஜ் கேலரியை கிளிக் செய்து ஒவ்வொரு ஸ்டேப் ஐயும் பாலோ செய்யவும்.

இதில் செட்டிங்க்ஸ் அல்லது டவுன்லோட் ஐகான் டிஸ்ப்ளே ஆகும் விட்ஜெட் கள் நாமாகவே டவுன்லோட் செய்ய வேண்டும். அந்த பட்டனை கிளிக் செய்தால் அது நம்மை கூகிள் ப்ளே ஸ்டார் க்கு அழைத்துச்செல்லும்.

 

இந்த லாஞ்சர் ஐ இன்ஸ்டால் செய்யும் பொழுதே அதனுடன் Buzz Widget என்னும் உப மென்பொருளும் இன்ஸ்டால் செய்யப்படும். அது இந்த லாஞ்சர் ஹோம் பேக் உடன் வரும் பலவிதமான விட்ஜெட் களை நாம் நமது தேவைக்கேற்ற படி மேம்படுத்திக்கொள்ள நீங்களாகவே design செய்து கொள்ள பயன்படுகிறது.

எச்சரிக்கை
பேட்டரி லைப் மோசமாக இருக்கிறது

மேலும் உங்களுக்கு வேறு ஹோம் ஸ்க்ரீன் மாற்ற வேண்டும் எனில் அதுவும் மிக எளிது.  செட்டிங்க்ஸ் –> Homepack Buzz .. உங்களுக்கு பிடித்த ஒன்றை தேடி இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.. எனக்கு பிடித்த IronMen அடிப்படையிலான தீம் இதோ உங்கள் பார்வைக்கு

 

 

Comments

comments