வேகமாக இணையத்தில் உலவ ஜாவ்லின் பிரவுசர்

உங்களில் பெரும்பாலோனோருக்கு நினைவிருக்கலாம் ஏற்கனவே கூகிள் ப்ளஸ் இல் ஒரு முறை லிங்க் பப்பிள் என்றொரு பிரவுசரை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். உங்களது எந்த ஒரு அப்ப்ளிகேசனில் இருந்தும் அது இணையதள இணைப்புகளை பேஸ்புக் மெசெஞ்சர் பப்பிள் இல் திறப்பது போல் திறந்து வைத்திருக்கும். இதன் முக்கிய பயன் என்ன வென்றால் நீங்கள் உபயோகிக்கும் எந்த ஒரு அப்ளிகேசன் னில் இருந்தும் விலகிப் போகத் தேவையில்லை. அந்த லிங்க் உங்களது அப்ப்ளிகேசனின் மீதே திறக்கும் அல்லது ஒரு மூலையில் நீங்கள் திறப்பதற்காக காத்திருக்கும். எனக்கு மிகப்பிடித்த வசதி இது. படங்களைப் பார்க்க

இலவசமாய் கிடைத்தாலும் இதன் குறைப்பாடு என்று சொல்லப் போனால் இலவச வெர்சனில் ஒரு அப்ப்ளிகேசன் இல் இருந்து ஒரே ஒரு லிங்க் ஐ மட்டும் நமக்கு திறந்து கொடுக்கும். ப்ரோ வெர்சன் ஐ $2.99 கொடுத்து டவுன்லோட் செய்ய வேண்டும். மேலும் வெப்சைட் லோட் டைம் அதிகமாகவும் சில இணையதளங்களை பார்க்கும் வசதி இன்றியும் பப்பிள் ஐ கிளிக் செய்து பார்க்கும் போது வரும் அனிமேசன் தட்டுத் தடுமாறி வருவது போலவும் இருக்கிறது. மேலும் குரோம் அல்லது பயர்பாக்ஸ் போன்று இது ஒரு தனி பிரவுசர் இல்லை. மற்றபடி குறை ஒன்றும் இல்லை.

இதற்க்கு மாற்று தேடிய போது தான் கிடைத்த நல்முத்து தான் ஜாவ்லின் பிரவுசர். இதன் சிறப்புகள்:

  • இது ஒரு தனி பிரவுசர். குரோம் யிற்கு மாற்றாய் உபயோகிக்க முடியும்.
  • AdBlock உடன் வெளியிடப்பட்டு இருக்கும் முதல் பிரவுசர்.
  • ரீடிங் மோட் என்றொரு வசதி. வெப்சைட் இல் இருக்கும் தேவையற்ற இணைப்புகளை விவரங்களை நீக்கி விட்டு நமக்குத் தேவையான கன்டென்ட் ஐ மட்டும் காட்டுகிறது
  • உண்மையான மல்டி டாஸ்கிங்!!!! லிங்க்பப்பிள் போலவே அனைத்து அப்ளிகேசன்களில் இருந்தும் லிங்குகளை சிறிய பப்பிள் இல் திறக்கிறது.
அதிகபட்சமாய் பத்து லிங்குகள் வரை திறக்க முடியும் என்பது எனக்கு மிக மிக பிடித்த வசதி. உங்களுக்கு இந்த பிரவுசர் பிடிக்கும் பட்சத்தில் InApp பர்சேஸ் மூலம் அவருக்கு $2.99 கொடுப்பதன் மூலம் நீங்கள் ப்ரோ வெர்சன் ஐ வாங்கிக்கொள்ளலாம்.

download செய்ய

The app was not found in the store. 🙁

Comments

comments