ராக் இஸ் டெட் Malware / adware in facebook:

ட்வேய்னே ஜான்சன் அல்லது ராக் (Rock) பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் என்ற படத்தின் மிகவும் ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்த போது இறந்து விட்டார் எனவும் அந்த வீடியோ வை பார்க்க கிளிக் செய்யவும் என இப்போது பரபரப்பாக ஒரு வீடியோ பேஸ்புக் இல் பரப்பப்பட்டு வருகிறது.

அது celebritydaily(dot)pw என்னும் இணையதளத்தின் மூலம் பரவுகிறது.

ஆனால் அவர் இறக்கவில்லை. அது ஒரு மோசடி வேலை. அந்த லிங்க் ஐ கிளிக் செய்யும் போது பெரும்பாலான மோசடி வேலைகளைப் போலவே அது உங்களை முதலில் உங்கள் பேஸ்புக் இல் ஷேர் செய்ய சொல்லுவதோடு மட்டுமன்றி

Facebook Media Plugin Required: download and install the plugin to watch the video

என்ற ஒரு பாப்அப் விண்டோ வையும் காண்பிக்கிறது. நீங்கள் இன்ஸ்டால் செய்யும் பட்சத்தில் தேவையே இல்லாத (PUP-potentially unwanted program) iLivid என்னும் ப்ரோக்ராம் ஐ இன்ஸ்டால் செய்கிறது. iLivid பெரும்பாலான Adware மற்றும் மால்வேர் ப்ரோக்ராம் ங்களை இன்ஸ்டால் செய்யக்கூடியது.

பாஸ்ட் அண்ட் ப்யுரியஸ் பிரபல நடிகர் பால் வால்கர் விபத்தில் இறந்து விட்டதால் ,அதே போல் ஒரு வதந்தியை உருவாக்கி வைரஸ் ஐ பரப்பும் உத்தியே இது. ஒரு வினாடி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உங்கள் OS ஐ reformat செய்ய வைத்து விடும். ஜாக்கிரதை.

 

நன்றி: malware alerts

Comments

comments