ப்ரோபைல் ப்ளோ: (Profile Flow) – ஆண்ட்ரைடு மொபைல் மேனேஜ்மென்ட்

உங்க மொபைல் இல் ப்ரோபைல் மேனேஜெமென்ட் என்பது என்ன? உங்களது நேரம் , இடம் பொறுத்து உங்கள் போன் ன் ரிங்டோன், அலாரம் , நோடிபிகேசன் உங்களது ஸ்க்ரீன் சேவர் முதலியவற்றை மாற்றுவது தான் ப்ரோபைல் மேனேஜ்மென்ட். உதாரணத்திற்கு நான் ஆபிஸ் இல் இருக்கும் போது எனது போன் சைலென்ட் மோட் லும், இரவு நேரங்களில் எனது நோடிபிகேசன்களை சைலென்ட் மோட் லும் செட் செய்து விடுவேன். பல நேரங்களில் சைலென்ட் மோட் செட் செய்ய மறந்து மீட்டிங் ன் போது போன் அலறி நம் மானத்தை வாங்கி விடும்.

பெரும்பாலான நமது நடவடிக்கைகள் ஒரே மாதிரியானவை அல்லவா? உதாரணத்திற்கு காலை எட்டில் இருந்து மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் இருப்பேன். இரவு பத்து மணி முதல் ஆறு மணி வரை உறக்கத்தில் இருப்பேன்.  ஆனால், சனி ஞாயிறு ஆபிஸ் இல் இருக்க மாட்டேன். அந்த சமயங்களில் நமது மொபைல் தானாகவே சைலென்ட் இல் மாறினால் நன்றாக இருக்கும் அல்லவா? அதே போல் ஆறு மணிக்கு மேல் தானாகவே சைலென்ட் மோட் இல் இருந்து வெளிவரவும் செய்தால் நமக்கு கவலையே இல்லை.

இந்த மொபைல் மேனேஜ்மென்ட் ஐ அடிப்படையான பல விசயங்களை பல மொபைல்கள் கொண்டிருந்தாலும் மிகச்சிறப்பான முறையில் நமக்குத் தேவையான சின்ன விசயங்களையும் கஸ்டமைஸ் செய்ய உதவுவது தான் profile Flow ஆண்ட்ரைடு அப்ளிகேசன்.

ஒரு ப்ரோபைல் என்பது மூன்று அடிப்படையான விசயங்களைக் கொண்டது:

ப்ரோபைல் ஆக்டிவேசன் மெதட்:

எப்போது எந்த நாளில் எந்த நேரத்தில் இந்த ப்ரோபைல் ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். உதாரணமாக

 • திங்கள் இல் இருந்து வெள்ளி வரை
 • காலை எட்டு மணியில் இருந்து மாலை ஆறு மணி வரை
என்ட்ரி டாஸ்க்ஸ்:

அந்த நேரம் அல்லது நாள் துவங்கும் போது என்ன செய்ய வேண்டும்?

 • நோடிபிகேசன் சத்தத்தை நீக்கி விடு
 • ரிங் சத்தத்தை நீக்கி விடு
எக்சிட் டாஸ்க்ஸ்:

அந்த நேரம் அல்லது நாள் முடியும் போது என்ன செய்ய வேண்டும்?

 • நோடிபிகேசன் சத்தம் 70% வைத்து விடு
 • ரிங் டோன் ஐ 100% வைத்து விடு
இது மட்டுமல்ல:

 • அலாரம் சத்தம்
 • வைப்ரேட் மோட்
 • மீடியா சத்தம்
 • ப்ரைட்நெஸ்
 • வால்பேப்பர்
 • கால் செய்வது

முதலிய பல டாஸ்க் களை நீங்கள் செட் செய்து கொள்ளலாம். எத்தனை விதமான என்ட்ரி மற்றும் எக்சிட் டாஸ்க்ஸ் இருக்கிறது என்பது தான் இந்த அப்ளிகேசன் னின் சிறப்பே. இந்த புகைப்படங்களைப் பார்த்தால் எளிதில் விளங்கும்

புகைப்படங்கள்:
வீடியோ:
Profile Flow
Profile Flow
Developer: agcTools
Price: Free+

Comments

comments