பேஸ்புக் ப்ரைவசி அப்டேட் (Privacy update in Facebook)

பேஸ்புக் இல் ப்ரைவசி என்றால் கிலோ என்ன விலை என்று தான் கேட்கவேண்டும்.  பேஸ்புக் ஐ உபயோகிக்கும் போது மட்டுமல்ல. பல சமயங்களில் நாம் பேஸ்புக் லாகின் ஐ உபயோகிப்போம். உதாரணமாக MyFitnessPal , feedly முதலிய அப்ளிகேசன்களை உபயோகிக்க நான் பேஸ்புக் லாகின் ஐயே உபயோகிக்கிறேன். நான் முதல் முறை லாகின் செய்யும் போது பெரும்பாலான அப்ளிகேசன்கள் என்னுடைய இமெயில் முகவரி , என்னுடைய நண்பர்களுடைய லிஸ்ட் , எனக்காக என்னுடைய பேஸ்புக் சுவரில் எழுதும் அனுமதி முதலியவற்றைக் கேட்க்கும். இதை நம்மால் கட்டுப்படுத்த இயலாது.

இன்று நடைபெற்ற பேஸ்புக் ன் F8 மாநாட்டில் ப்ரைவசி குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி  நீங்கள் எத்தகைய அனுமதியை மற்ற அப்ளிகேசன்களுக்கு வழங்க விரும்புகிறீர்கள் என்பதை ஒவ்வொன்றாய் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக நீங்கள் இமெயில் முகவரிக்கு மட்டும் அனுமதி கொடுத்து மற்ற அனைத்தையும் மறுக்கலாம். இத்தகைய வசதியின் மூலம் நாம் எதை யாருக்கு பகிர்கிறோம் என்று தெளிவாய் தீர்மானிக்க முடியும்

வீடியோ விளக்கம் ஒன்று

மற்றொரு அறிவிப்பும் காதில் தேனாய் பாய்ந்தது. அனானி (anonymous login)  லாகின் வசதி. பேஸ்புக் ன் மூலம் லாகின் செய்யும் போது ஒரு validation க்கு மட்டும் உபயோகிக்கப்பட்டு மற்ற அனைத்து  தகவல்களும் அப்ளிகேசன் க்கு தரப்படாமல் முடக்கப்படுகிறது.

வீடியோ விளக்கம் இரண்டு

இவ்விரு வசதிகளும் மிக மிக முக்கிய மைல்கல் என்று சொன்னால் மிகையாகாது.

Congratulations Facebook. Finally You have grown up!!

 

 

Comments

comments