டைம்லி – உங்களில் அதிகாலை உறக்கம் கலைக்க ஓர் ஆப்

உங்களில் பெரும்பாலோனருக்கு  timelyஆப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. கூகிள் ப்ளே ஸ்டோர் இல் 2013 ம் ஆண்டிற்கான மிகச்சிறந்த முறையில் டிசைன் செய்யப்பட்ட ஆப்  ஆக தேர்ந்தெடுக்கப்பட்டது. டிசைன் மட்டுமா? அது மட்டுமல்ல. அதன் செயல்பாடுகளும் மிக அருமை. இது ஒரு அலார்ம் ஆப். அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா?

1. உங்களிடம் ஒன்றிற்கு மேற்பட்ட போன் அல்லது டேப்லெட் இருந்தால் அனைத்திலும் அலாரம் அடிக்கும். ஒன்றில் ஸ்நூஸ் செய்தால் அனைத்திலும் ஸ்நூஸ்  ஆகும். ஒன்றில் டிஸ்மிஸ் செய்தால் அனைத்திலும் டிஸ்மிஸ் ஆகிவிடும். ஒரு வேலை உங்கள் போன் இல் சார்ஜ் இறங்கிவிட்டால் அடுத்த போன் அல்லது டேப்ளேட் இல் அலாரம் அடிக்கும்.

2. போன் ஐ கையில் எடுக்கும் போதே அலாரம் சத்தம் பாதியாக குறைந்து விடும்

3. அலாரத்தை நிறுத்த பேட்டர்ன் லாக் அல்லது புதிர் போன்றவற்றை நீங்கள் செட் செய்து கொள்ளலாம்.

4. மிக முக்கியமாய் பொதுவான அலாரம் ஆப் இல் ஸ்நூஸ் செய்து விட்டால் திரும்பவும் கேன்சல் செய்யும் வசதி இருக்காது. உதாரணத்திற்கு பத்து நிமிடம் ஸ்நூஸ்  செய்து விட்டீர்கள். ஆனால் உங்களுக்கு விழிப்பு வந்து விட்டது. இப்போது ஸ்நூஸ் ஐ கேன்சல் செய்ய வேண்டுமென்றால் முடியாது. இந்த ஆப் இல் அந்த வசதியும் உண்டு.

5.மற்றும் ஒரு முக்கிய வசதி ஸ்நூஸ் செய்வது மிக மிக மிக எளிது. போன் ஐ எடுத்து கவிழ்த்து போடுங்கள் அவ்வளவுதான். 🙂

6. கடைசியாக decremental snooze. முதல் முறை snooze செய்ய 9 நிமிடம். இரண்டாம் முறை 6 நிமிடம் என குறைந்து கொண்டே வருவது சிறப்பு..

கூகிள் இந்த ஆப் ஐ வாங்கி விட்டதால் இலவசமாய் தரவிறக்கிக் கொள்ளலாம்.

https://play.google.com/store/apps/details?id=ch.bitspin.timely

Comments

comments