கூகிள் க்ளவுட் பிரிண்டிங்

நேற்று அவசரமாய் ஒரு டாகுமென்ட் பிரிண்ட் எடுக்க வேண்டி இருந்தது. எனது கூகிள் அக்கவுன்ட் யிற்கு டாகுமென்ட் ஐ அனுப்பி விட்டு FedEx ஆபிஸ் இற்கு பிரிண்ட் எடுக்க சென்றேன். NFC அல்லது ப்ளுடூத் வழி file ஐ அனுப்பி வைத்து விடலாம் என்பது என் எண்ணம். ஆனால் அங்கு இருந்து பிரிண்டர் இல் அப்படி ஒரு வசதி இல்லை. ஆனால் எனது கூகிள் டாக்ஸ் (Google docs) அக்கவுண்டில் லாகின் செய்யும் வசதி இருந்தது என்னிடம் 2 factor அதென்டிகேசன் வசதி இருந்ததால் அதன் மூலம் லாகின் செய்யலாம் என்றெண்ணி முயற்சி செய்தேன். ஏதோ காரணத்தால் என்னால் லாகின் செய்ய முடியவில்லை. வீட்டுக்கு சென்று பென் டிரைவில் காபி செய்து வந்து தான் பிரிண்ட் அவுட் எடுக்க வேண்டும் என யோசித்த வேளையில் கூகிள் க்ளவுட் பிரிண்ட் நியாபகம் வந்தது.

இதன் படி கூகிள் டாக்ஸ் இல் இருக்கும் எந்த ஒரு டாகுமென்ட் ஐயும் நமது வசதிப்படி குறிப்பிட்ட vendor இன் சர்விஸ் இல் queue செய்து விட்டு நாம் அந்த vendor ன் கடைக்கு சென்று document ஐ பாஸ்கோட் கொடுத்து retrieve செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம். வழிமுறைக்கு கீழே கொடுத்துள்ள படங்களைப் பாருங்கள்:

இதை செய்த உடனே FedEx இல் செய்ய வேண்டிய வழிமுறைகள் இதோ:

1. Select ‘Print with Retrieval Code.’ என்ற ஒரு ஆப்சனை தெரிவு செய்யவும்

  1. உங்களுடைய Unique Reference Code ஐ அடிக்கவும்.

அவ்வளவுதான். உங்கள் டாகுமென்ட் உடனே உங்களுக்கு தோன்றும். அதை பிரிண்ட் எடுத்து கொள்ளவேண்டியது தான். இனி பென்டிரைவ் இல் டாகுமென்ட்களை வைத்துக் கொண்டு அலையத் தேவையில்லை தானே?!!

 

Comments

comments