ஆண்ட்ரைடு டிவைஸ் மேனேஜர் – உங்கள் போன் ஐ கண்டறிய / தகவல்களை அழிக்க

சில வாரங்களுக்கு முன் தினேஷ் ஐபோன் இல் Find My Phone என்றொரு வசதி இருப்பதைப் பற்றி பதிவு எழுதியது நியாபகம் இருக்கலாம். அதே வசதி ஆண்ட்ரைடு இல் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இருக்கிறது என்று அவர் பதிவில் பின்னூட்டமிட்டு விட்டு அதைப் பற்றி எழுத வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணி இருந்தும் இன்று தான் அதற்கு நேரம் வாய்த்தது.

ஆண்ட்ரைடு டிவைஸ் மேனேஜர் சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. நீங்கள் செய்ய வேண்டியது https://www.google.com/android/devicemanager என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டியது தான். அப்படி செல்லும் போது நீங்கள் உங்களது ஆண்ட்ரைடு போன் இல் எந்த கூகிள் அக்கவுன்ட் உபயோகிக்கிரீர்களோ அதே அக்கவுன்ட்டில் லாகின் செய்ய வேண்டும்.

லாகின் செய்யும் போது சிறிது நேரம் எடுத்து பிறகு உங்களது டிவைஸ் இருக்கும் இடத்தை காட்டும்.

 

அதில் மூன்று விதமான வசதி இருப்பதை நீங்கள் காணலாம்.

ரிங்:
ஒரு வேளை நீங்கள் வீட்டிலேயே உங்கள் போனை எங்கேயோ மறந்து வைத்து விட்டால் இந்த ஆப்சன் உபயோகித்து உங்கள் போன் ஐ சத்தம் போடச் செய்ய இயலும். அப்போது முழு வால்யும் அளவில் சத்தம் போடும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்:

உங்கள் போன் ஐ லாக் செய்ய இயலும்.

எரேஸ்:
இந்த ஆப்சனை உபயோகித்து தொலைந்து போன உங்கள் போனில் இருந்து அனைத்து தகவல்களையும் அழிக்க முடியும்.

மேலும் உங்களிடம் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட போன் அல்லது டேப்ளேட் இருக்கும் பட்ச்சத்தில் அவையும் இங்கே டிஸ்ப்ளே ஆகும்.

 

ஸ்மார்ட் போன் உபயோகிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்திருக்க வேண்டிய வசதி இது. இதை தரவிறக்க

The app was not found in the store. 🙁

Comments

comments